திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (09:18 IST)

13 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட், ஒரு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட். வானிலை எச்சரிக்கை..!

தென்மேற்கு பருவ மழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை வெளுத்து கட்டி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு மற்றும் 13 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 30-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கேரளாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva