மோடியை சந்திக்க மீண்டும் டெல்லிக்கு வரிந்துக்கட்டும் ஓபிஎஸ்!!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து இன்று மாலை டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சந்திப்பாவது நிகழுமா என கேள்வி எழுந்துள்ளது.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது மோடியை சந்திப்பதற்கு ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.
ஆனால் முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இதானல், டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஷீரடிக்கு புறப்பட்டு சென்றார்.
ஓபிஎஸ் ஷீரடியில் இருந்து நேராக சென்னை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
மேலும், மோடியை நாளை ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பில் தமிழக அரசியல், அதிமுக இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.