1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (21:25 IST)

மீண்டும் அரசியல் களத்தில் கலைஞர்: கி.வீரமணி மற்றும் திருநாவுக்கரசருடன் சந்திப்பு!!

திமுக தலைவர் கருணாநிதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு கி.வீரமணி மற்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


 
 
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளன்று கட்சி உறுபினர்கள் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவரை சந்திக்க ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், அவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்களின் பறிந்துரையின் பேரில் சந்திப்பு நிறுத்தப்பட்டது.
 
நாளை நடைபெறவிருக்கும் முரசொலி நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியிலும் கலைஞர் பங்கேற்கமாட்டார் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், கி.வீரமணி மற்றும் திருநாவுக்கரசர் புதனன்று கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.


 

 
வீரமணி கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும், திருநாவுக்கரசர் தனது மகளின் திருமண அழைப்பிதழை கலைஞருக்கு கொடுக்க வந்தாதவும் கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பின் போது திமுக முன்னாள் மத்திய அமிச்சர் டி.ஆர்.பாலு உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.