1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:02 IST)

வேளாண் சட்ட விவாதத்திற்கு அனுமதி மறுப்பு! – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் வேளாண் சட்ட விவாதத்திற்கு அனுமதி அளிக்காததால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 66 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.