ஒமைக்ரான் சோதனை: விமான நிலையத்தில் பலமணி நேரம் காத்திருக்கும் பயணிகள்
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் பல மணிநேரம் காத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஆபத்தான நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள 14 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் சோதனை செய்வதற்காக கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
விமான நிலையங்களில் ஒரு மணி நேரத்தில் சுமார் 500 பேருக்கு மட்டுமே சோதனை செய்ய முடியும் என்பதால் காத்திருக்கும் நேரம் அதிகரித்து வருவதாகவும் விமான பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது