செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (17:06 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா - சிங்கப்பூர் விமான சேவை துவக்கம்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை கொரோனா வைரஸ் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது 
 
இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது. சென்னை - சிங்கப்பூர், டெல்லி - சிங்கப்பூர் மற்றும் மும்பை - சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தினமும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன