புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (10:17 IST)

வெயிலின் தாக்கம் எதிரொலி: பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை!

வெயிலின் தாக்கம் எதிரொலியாக ஒடிசா அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தான் கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஒரிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran