ஆருஷி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெற்றோர் விடுதலை


sivalingam| Last Updated: வியாழன், 12 அக்டோபர் 2017 (15:48 IST)

கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி அருகே உள்ள பல்டாக்டர்கள் தம்பதியர்களின் மகள் 14 வயது சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அச்சிறுமியின் பெற்றோர்களான ராஜேஷ், நூபுர் தம்பதியினர்களுக்கு ஆயுள்தண்டனை அளித்திருந்தது.

 


ஆரூஷியும் வேலைக்காரரும் படுக்கையறையில் அலங்கோலமான நிலையில் இருந்ததாகவும் இதை பார்த்த பெற்றோர் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்-நூபுர் தம்பதியினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் ராஜேஷ்-நூபுர் தம்பதியினர் நிரபராதிகள் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :