Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றும் பெற்றோர்: அதிர்ச்சி வீடியோ!

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றும் பெற்றோர்: அதிர்ச்சி வீடியோ!


Caston| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (15:18 IST)
அர்ஜெண்டீனாவில் சிறுமியின் வாயில் பெற்றோர்களே வலுக்காட்டாயமாக மதுவை ஊற்றியும், சிகரெட்டை புகைக்கவும் வைத்த அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது வைரலாக பரவி வருகிறது.

 
 
அர்ஜெண்டீனாவில் ஒரு சிறுமியை வீட்டில் உட்கார வைத்து வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி, கஞ்சா கலந்த சிகரெட்டை வாயில் நுழைத்தும் வைக்கின்றனர் சிறுமியின் பெற்றோர்கள். இதனால் போதை மயக்கத்தால் தள்ளாடும் அந்த சிறுமி கீழே சாய்ந்து விழுகின்றார். சிறுமியை அப்போது சிறுமியின் தாய் தாங்கி பிடிக்கும் காட்சியும் அதில் உள்ளது.

 

நன்றி: Daily Mail
 
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து சிறுமியின் தாய் மற்றும் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்த வீடியோவை தாங்கள் விளையாட்டாக எடுத்ததாகவும், குழந்தைக்கு தாங்கள் மது கொடுக்கவில்லை எனவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
 
அதே நேரத்தில் அந்த சிறுமியின் தாய்க்கு 17 வயது தான் ஆகிறது. மைனர் பெண்ணான அவர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :