1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (13:13 IST)

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு.. மத்திய அமைச்சரவையில் பங்கேற்பா?

பிரதமர் மோடியை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்துள்ளதை அடுத்து மத்திய அமைச்சரையில் நிதிஷ்குமாரின் கட்சியும் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன

இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து கடந்த சில நாட்களாக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வந்ததாக கூறப்பட்டது

 இந்த நிலையில் இன்று திடீரென பிரதமர் மோடியை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் தேர்தலுக்குப் பின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் மத்திய அமைச்சரவையில்  இடம் பெறுவார்கள் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை தான் இன்று நடந்தது என்று கூறப்படுகிறது.

Edited by Siva