வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (17:37 IST)

நிபா வைரஸ் - முன்னெச்சரிக்கை மற்றும் அறிகுறி

கேரள மாநிலத்தில் உயிர்களை பறித்த நிபா வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
நிபா வைரஸ் கேரளாவில் நேற்று முதல் உயிர்களை பறித்து வருகிறது. நிபா வைரஸ் கேரள மாநிலம் கோழிகோடு பகுதியில் பரவ தொடங்கியது. தற்போது வரை நிபா வைரஸ் தாக்கி 10 பேர் வரை பலியாகியுள்ளனர். அதில் 3 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மீதமுள்ளவர்களுக்கு சோதனை முடிவு இன்னும் கிடைக்கவில்லை. நிபா வைரஸ் எப்படி பரவுகிறது. நிபா வைரஸ் தாக்கினால் என்ன அறிகுறி இருக்கும் என்று ஊடகங்கள் மக்களிடையே முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தி வருகிறது. 
 
நிபா வைரஸ் 1998,1999 ஆண்டுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதன்முதலில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது. 
 
 
 
பழம் தின்னி வௌவால்களால் இந்த நிபா வைரஸ் பரவியது. வௌவால்களிடமிருந்து வீட்டில் வளர்க்கும் விலங்குகள், கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பரவுகிறது. 
நிபா வைரஸ் அறிகுறிகள்:-
 
3-14 நாட்கள் காய்ச்சல், தலைவலி, மயக்கம், கோமா பின்னர் மரணம். சிலருக்கு காய்ச்சல் வரும் முன் சுவாசப் பிரச்சனை இருக்கும்.
 
இந்த நோயை தடுக்க தடுப்பூசி எதுவும் கிடையாது. மனிதர்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமை படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே தற்போது வரை இந்த நோய்க்கான சிகிச்சையாக உள்ளது.
 
 
 
இந்த நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வௌவால்கள் இருக்கும் பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது. நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் கால்நடைகளிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும். மனிதர்களிடையே இந்த நிபா வைரஸ் எளிதாக பரவும் தன்மை கொண்டது.