1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (18:15 IST)

அது ரஃபேல் விமானம் இல்ல முருகேசா! – கலாய் வாங்கிய உ.பி அமைச்சர்!

இன்று பிரான்ஸிலிருந்து ரஃபெல் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில் வேறு விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்ட உத்தர பிரதேச அமைச்சர் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களில் முதலாவதாக 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த விமானங்கள் ஹரியானாவின் அம்பால விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து அவற்றுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் விமானம் இந்தியா வந்துள்ளதை கொண்டாடும் விதமாக பலர் அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஃபேல் என நினைத்து எஃப் 16 ரக விமானத்தின் படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் உத்தர பிரதேச அமைச்சர் கமல் ராணி வருண். அதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள நெட்டிசன்கள் பலர் அது இந்தியாவின் ரஃபேல் விமானம் அல்ல.. பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள எஃப் 16 என்னும் அமெரிக்க தயாரிப்பு விமானம் என கூறியுள்ளனர்.