ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரண் அடைகிறார் சித்து!
இந்தியா கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து வழக்கு ஒன்றில் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவர் இன்று சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்று சித்து பாட்டியாலா காவல் நிலையத்தில் சரண் அடைய உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் தண்டனையை ரத்து செய்ய சித்து சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
கடந்த 1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிறுத்துவது தொடர்பான ஏற்பட்ட மோதலில் குர்னாம்சிங் என்பவரின் தலையில் ஓங்கி அடித்தால் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது