புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (20:38 IST)

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: ஜூன் மாதம் முதல் அமல்!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் 2020 ஜூன் முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ரேஷன் பொருள் வழங்கும் விதமாக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது. பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் 6 மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரே மாதிரியாக டிசைனில் வழங்கப்பட உள்ள இந்த ரேசன் அட்டைகளில் இரண்டு மொழிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. முதலாவது மொழி ரேசன் அட்டைகள் வழங்கப்படும் பிராந்தியத்தின் மொழியாகவும், இரண்டாவது ஆங்கிலம் அல்லது இந்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த புதிய ரேசன் கார்டின் மூலம் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அங்காடிகளில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக பத்து இலக்க அடையாள எண்ணும் வழங்கப்படும். நாடு முழுவதும் இந்த தேசிய அளவிலான ரேசன் திட்டத்தில் 75 கோடி பேர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.