ராணுவ வீரருக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மும்பை சாலை
இந்தியாவில் அரசியல்வாதிகளின் இறுதி ஊர்வலங்கள் மட்டுமே பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மேஜர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்காக ஒரு சாலை முழுவதையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சண்டையில் மேஜர் கஸ்தூரிபா ரானே என்பவர் வீரமரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. அவரது உடல் செல்லும் பாதையில் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் மலர்களை தூவி சாலையை மலர்ச்சாலையாக மாற்றி, ராணுவ வீரரை வழியனுப்பி வைத்தனர்.
மேலும் மேஜரின் உடல் அந்த சாலை வழியே சென்றபோது பொதுமக்கள் 'வந்தே மாதரம்' பாரத மாதா கி ஜே' என்று கோஷமிட்டனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது