செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (09:38 IST)

துஷ்யந்துடன் இருந்த பார்லிமெண்ட் எம்பிக்களுக்கு கொரோனா?

துஷ்யந்துடன் இருந்து மேலும் இரு எம்.பிக்களுக்கு கொரோனா பதிப்பு இருக்க கூடுமோ என அஞ்சப்படுகிறது. 

 
பாலிவுட் பட பின்னணிப் பாடகி கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் விருந்தில் கலந்துகொண்ட வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிகா, லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.
 
தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் சில எம்.பிக்களுக்கு கொரோனா பதிப்பு இருக்க கூடுமோ என அஞ்சப்படுகிறது. 
 
ஆம், துஷ்யந்த் விருந்தில் பங்கேற்ற மறுநாள் வட கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி மனோஜ் திவாரி மற்றும் சுரேந்திரநகர் நிஷிகாந்த் ஆகிய இருவருடன் பார்லிமெண்ட் மத்திய ஹாலில் ஒன்றாக இருந்ததாக தெரிகிறது. எனவே இவர்கள் இருவரும் இவர்களை சார்ந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.