செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (08:31 IST)

கொரோனாவைப் பரப்ப முயன்ற பாடகி கனிகா கபூர் – போலிஸார் வழக்கு !

மும்பையைச் சேர்ந்த பின்னணி பாடகி கனிகா கபூர் கொரோனா அறிகுறிகளோடு பார்ட்டிக்கு சென்று அதைப் பரப்ப முயன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதை மதிக்காமல்  லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தராராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

இதனால் போலிஸார் கனிகா மீது தொற்று பரவ வாய்ப்புகள் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.