1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (20:32 IST)

22 மொழிகளிலும் பேசலாம்: மாநிலங்களவையில் மாற்றம்!

இந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. எனவே, மாநிலங்களவையில் இனி 22 மொழிகளிலும் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. 
 
ஆம், பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை நாடாளுமன்றம் நியமித்துள்ளது. அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் இருந்தன. 
 
இந்நிலையில், மீதமுள்ள 10 மொழிகளில் டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகிய 5 மொழிபெயர்ப்பாளர்கல் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 
 
இதன் மூலம், வரும் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.