வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:44 IST)

டேட்டிங் செயலியில் திருமணமானவர்கள்தான் அதிகம்? – அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!

இந்தியாவில் திருமணம் ஆகாதவர்களை போல திருமணம் ஆனவர்களும் அதிகமாக டேட்டிங் செயலிகளில் கணக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இளம் வாலிபர்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் லிவ் இன் முறை மற்றும் டேட்டிங்கில் சமீப காலத்தில் அதிகமான ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு டேட்டிங் செயலிகள் இந்தியாவில் அதிகமான இளைஞர்களிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது.

அதுபோல திருமணமானவர்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு செயலியும் இந்தியாவில் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். பிரான்சில் திருமணமானவர்கள் வேறு சிலருடன் டேட்டிங் செய்ய பயன்படுத்தும் அந்த செயலியில் 10 லட்சம் திருமணமான இந்தியர்களும் கணக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் திருமணம் மீதான நம்பிக்கைகள் உடைந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K