விருந்தினருக்கு காத்திருந்த பள்ளி நிர்வாகம்; கடுப்பாகி கொடியேற்றிய குரங்கு: வைரலாகும் வீடியோ!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தற்போது குரங்கு ஒன்று தேசிய கொடியையேற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

 
 
அனைத்து பள்ளிகளிலும் கொடியேற்றம் நடைபெருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சிறப்பு விருந்தினருக்காக பள்ளி நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தது.
 
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :