Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மறக்க முடியுமா ஜாலியன் வாலாபாக் படுகொலை

சனி, 12 ஆகஸ்ட் 2017 (16:12 IST)

Widgets Magazine

1918ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி, ரெளலட் சட்டம் என்கின்ற ஒரு அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, எந்தவொரு அரசியல்வாதியையும் எவ்வித காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
 


 

இச்சட்டத்தை பாலகங்காதர் திலகரும், மகாத்மா காந்தியும் வன்மையாகக் கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஜெனரல் டையர் என்ற வெள்ளைய அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
 
மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
 
ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.
 
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்புணர்வை அதிகரித்தது. எதிர்ப்பு மேலும் தீவிரமானது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சரோஜினி நாயுடுவின் பங்கு!

இந்தியா 70-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில், இந்திய சுதந்திரப் ...

news

ஆஷ்துரையை கொன்று; வஞ்சத்தை வென்ற வாஞ்சிநாதன்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங்கோட்டையில் 1886 ஆம் ஆண்டு வாஞ்சிநாதன் பிறந்தார். ...

news

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ்!!

நாம் இன்று 70ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இந்தியர்களை ஒன்றுதிரட்டி ...

news

மகாத்மா காந்தியும் அஹிம்சை வழி போராட்டங்களும்....

இந்தியாவின் விடுதலைக்கு அஹிம்சை வழி போராட்டங்களால் வித்திட்டவர் மகாத்மா காந்தியடிகள்.

Widgets Magazine Widgets Magazine