புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (18:03 IST)

யாராக இருந்தாலும் தவறு தவறுதான் – கட்சியினருக்கே தண்டனை கொடுக்கும் மோடி?

”யாருடைய மகனாக இருந்தாலும் அரசு அதிகாரியை தாக்குவது கண்டிக்கத்தக்கது” என பிரதமர் மோடி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மத்தியபிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அரசு அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் அடித்துள்ளார் அந்த பகுதி எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா. பாஜக எம்.எல்.ஏவான இவர் முக்கிய பாஜக தலைவரான ஆகாஷ் வரிகியாவின் மகன்.

இந்த வன்முறை சம்பவம் பற்றி எதிர்கட்சிகள் விவாதங்களை கிளப்பியுள்ளன. மக்களவையில் பேசும்போது இதுபற்றி பிரதமர் மோடி “சட்டத்தை மீறி ஒரு அரசு அதிகாரியை தாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது. அவர் யாராக இருந்தாலும் தவறு தவறுதான்” என சொன்னதாக கூறப்படுகிறது.

எங்க மோடி எவ்வளவு கண்டிப்பானவர் பார்த்தீர்களா என சில பாஜகவினர் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.