ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (16:18 IST)

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி: முதல்வர் கேலி பேச்சு

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளதாகவும், ஆதலால் தன்னை எப்போதும் விளம்பரப்படுத்தி கொண்டே இருக்கிறார் எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியின் கவர்னர் கிரண்பேடி, கடந்த ஜுன் 30 ஆம் தேதி, தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் செய்பவர்கள் என்றும் தமிழகத்தில் நிலத்தடி நீர் இல்லாமல், மக்கள் தவிப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள் தான் காரணம் எனவும் தனது டிவிட்டரில் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

”தமிழகத்தில் மட்டும் இல்லை, தென்னிந்தியா முழுவதும் மழையின்மையால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது “ என்று கூறியுள்ளார்.

மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடி, எந்த வித ஆதாரமும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் மக்களையும் குற்றம் சுமத்தி வருகிறார் எனவும், அவருக்கு விளம்பர வியாதி இருப்பதால் எப்போதும் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறார் எனவும் புதுவை முதல்வர் நாராயணசாமி கேலி செய்துள்ளார்.