”நீரின்று அமையாது” என்ற குறளை தமிழில் மேற்கோள்காட்டிய மோடி: சுதந்திர தினத்தின் பிரதமர் உரை

Last Updated: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (10:57 IST)
சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் மக்களுக்கு உரையாற்றிய மோடி, தண்ணீர் அவசியத்தை குறித்து “நீரின்றி அமையாது உலகு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியதாக கூறப்படுகிறது.

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  அப்போது, தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் இன்றும் உள்ளன என்றும், அனைவரது வீட்டிற்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன் என்றும் கூறினார்.

அதன் பின்பு தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து பேசிய பிரதமர் மோடி, “நீரின்றி அமையாது உலகு” என்ற திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள்காட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :