தொழிலதிபர் போனை ஹேக் செய்து ரூ.1 கோடி பணம் மோசடி செய்த மர்ம கும்பல்: போலீசார் விசாரணை
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரின் போனை ஹேக் செய்து அவருடைய போனில் இருந்து அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற நகரில் ஒரு தொழிலதிபர் ஒருவரின் மொபைல் போனை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். அதன் பின்னர் அந்த மொபைலில் இருந்து ரூபாய் 99.50 லட்ச ரூபாய் பணத்தை தங்களுடைய வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
தொழிலதிபரின் போன் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களில் ஹேக் செய்யப் பட்டதாகவும் அதன் மூலம் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran