செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:43 IST)

19 வயதில் ரூ.1000 கோடி சொத்து: இளம் தொழிலதிபர்களின் சாதனை!

industralist
19 வயதில் ரூ.1000 கோடி சொத்து: இளம் தொழிலதிபர்களின் சாதனை!
இந்திய இளைஞர்கள் 19 வயதில் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியல் வெளியாகி நிலையில் அதில் செப்டோ என்ற செயலியை நிறுவிய நிறுவனகளான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய தொழிலதிபர்கள் இடம்பிடித்துள்ளனர் 
 
இவர்கள் தங்களது 19 வயதிலேயே ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆயிரத்து 36 வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் என்பதும் படித்துக் கொண்டிருக்கும்போதே செப்டோ என்ற ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும்  நிறுவனத்தைத் தொடங்கி இரண்டு வருடங்களில் தங்கள் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது இவர்களது சொத்து மதிப்பு 1200 கோடி என்றும் 17 வயதில் ஆரம்பித்த இவர்களது தொழில் நிறுவனம் இரண்டு வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது