ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (17:38 IST)

ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் யாத்திரை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றாரா?

MK Stalin
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை தொடங்க உள்ள நிலையில் இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை என்ற யாத்திரையை செப்டம்பர் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் தொடங்க உள்ளார். இந்த யாத்திரையை கேரளா ஆந்திரா கர்நாடகா காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பதும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி அளித்தபோது செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்