வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:52 IST)

ஜெயலலிதா மரணம்: விசாரணை அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!

Jayalalitha
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சற்றுமுன் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது அதன் பின்னர் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த ஆணையத்தின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.