1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (10:23 IST)

இந்தியா திரும்பிய மிஸ் யுனிவர்ஸ் அழகிக்கு சிறப்பான வரவேற்பு

சமீபத்தில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து அவர்கள் இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் தேசியக்கொடியை காட்டி வரவேற்பளித்தனர். 
 
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற பஞ்சாபை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஹர்னாஸ் இன்று இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியா திரும்பினார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது 
 
தூதரக அதிகாரிகள் மற்றும் பலர் தேசியக்கொடியுடன் அவரை வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிஸ் யுனிவர்ஸ் மகுடத்தை அணிந்து அவர் பத்திரிகையாளர்கள் முன்பு போஸ் கொடுத்த நிலையில் அவரை ஏராளமான கேமராமேன்கள் புகைப்படம் எடுத்தார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது