செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (17:37 IST)

மாணவ மாணவிகளுக்கு ஒரே சீருடை - இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு!

பாலின பேதமின்றி மாணவர்களுக்கு சீருடை அளித்ததை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய அமைப்பு. 

 
கேரளாவில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகிய இரு பாலினர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலின பாகுபாட்டை நீக்கும் வகையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த சீருடையை அணிந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் ஆசிரியர்கள் அவர்களை வரவேற்ற காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலின பாகுபாடு அற்ற சீருடை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 
 
இந்நிலையில் இதனை எதிர்த்து அங்கு இயங்கி வரும் இஸ்லாமிய அமைப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ‘பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிடும் நடவடிக்கை இது’ என கண்டனம் தெரிவித்ததாக தெரிகிறது.