1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (13:49 IST)

டேட்ஸ், பாதாம், வால்நட்... அமைச்சர்களை புஷ்டியாக்கும் மத்திய அரசு!

சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சகத்தின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் டேட்ஸ், பாதாம், வால்நட் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சகத்தின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் பிஸ்கெட்டுகள் போன்ற திண்பண்டங்கள் வழங்கப்படுவது வழக்கமாக ஒன்று. ஆனால், இந்த வழக்கத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், பிஸ்கெட்டுகள் குக்கீஸ் மற்றும் துரித உணவு வகைகளுக்கு பதிலாக ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வழங்க அந்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பேரீச்சம்பழங்கள், வறுத்த பாதாம், வால்நட் உள்ளிட்ட பருப்பு வகைகள் சிற்றுண்டிகளாக வழங்கப்படும் என சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 
 
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.