திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (15:02 IST)

இந்தியாவில் மனித உரிமை மீறல்! – அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அமெரிக்க அமைச்சர் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், அதை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சில நாட்களுக்கு முன்னதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய நிலவரம் குறித்து அமெரிக்காவுக்கு ஒரு கருத்து உள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்கும் கருத்துகள் இருக்கிறது என பேசியுள்ளார்.