ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:53 IST)

முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது: காஷ்மீரில் பரபரப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர்  தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதுகுறித்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நாளை மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
 
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.