பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: அரசியல் கட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்வுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் எந்த கட்சியுடன் தனது கட்சி கூட்டணி வைக்காது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பல தேர்தலில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததில் கசப்பான அனுபவங்கள் உருவாகியுள்ளதால் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva