புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (15:02 IST)

முதலில் வெற்றி, பிறகுதான் பிரதமர் வேட்பாளர் – மம்தா கருத்து

ராகுல்காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசரமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜக வுக்கு எதிராக ஆளும் கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமென்று ராகுல்காந்தி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதை தமிழகத்தின் ஸ்டாலின், திருமா வளவன், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் ஏற்றுள்ளனர். ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் பாசிச பாஜக வின் ஆட்சியை ஒழிக்க ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என அறிவித்தார். அதை விழாவில் இருந்த சந்திரபாபு நாயுடு, திருமா வளவன் போன்ற தலைவரகளும் வழிமொழிந்தனர்.இதுகுறித்து மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் இதுகுறித்த எந்த கருத்தையும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர்.

தற்போது ஸ்டாலினின் இந்த கருத்து குறித்து மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் ‘அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை. அதற்கு, இது சரியான நேரமும் இல்லை. தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக இணைந்துள்ளோம். அப்படி இருக்க, தனியாக யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது; எனக் கூறியுள்ளார்.  இதனால் கூட்டணிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.