1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (10:22 IST)

இதற்காக தான் ராகுல் காந்தியை முன்னிறுத்தினேன்: மனம்திறந்த ஸ்டாலின்!!!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கான காரணம் குறித்து ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியை ஒழித்து, ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என கூறினார். காங்கிரஸ் - திமுகவிடையே விரிசல் உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கூறியது எதிர்கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஸ்டாலின் இவ்வாறு கூறியது தேசிய அரசியலில் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 
 
வடமாநிலங்களில் இது தான் ஹாட் டாப்பிக். ஸ்டாலினின் இந்த முடிவை திமுக கூட்டணி கட்சிகள் சிலர் முன்மொழிந்தாலும் கூட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கான காரணம் குறித்து ஸ்டாலின் அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். அதில் பாஜகவின் கோட்டையாக விளங்கிய மூன்று மாநிலங்களில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றுள்ளார். மோடி அரசை வீழ்த்த வலுவான தலைமை ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தான், அதுவே மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே என் கருத்தை சொன்னேன்.
 
எனவே, "நாசக்கரத்தை வீழ்த்தி, நாட்டைக் காத்திட நேசக் கரங்களாய் இணைந்திடுவோம்" என ஸ்டாலின் அறிக்கையில் குற்பிட்டுள்ளார்.