வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (15:27 IST)

திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சகா பதவியேற்பு

manik sakha
திரிபுரா மாநில முதலமைச்சராக இன்று 2 வது முறையாக  மாணிக் சகா பதவியேற்றுக் கொண்டார்.

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக  வெற்றி பெற்றது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 32 இடங்களில் பாஜகவும்.. அக்கட்சியின் கூட்டணி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டன.

இதன்பின்னர், பாஜக உயர்மட்டக்குழு  தலைவர்கள்  தலைமையில் திரிபுரா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.இத்ல், திரிபுரா முதவராக மாணிக் சகாவை ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, இன்று  திரிபுரா மாநில புதிய அமைச்சரவை  பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பாஜகவைச் சேர்ந்த மாணிக் சகா முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.