திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (17:08 IST)

சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய நபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை..!

Lizard
சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கிய நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்பூர் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரால் புகாரின் அடிப்படையில் மகேஷ் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து போலீசார் தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்த மகேஷ் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் உடல் நல குறைவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சிறை செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கிய நபர் உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran