Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மொபைலுக்கு பதில் காலி பெட்டி வந்ததாக கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் திருடன்


sivalingam| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (16:01 IST)
இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்தால் அதற்கு பதிலாக சோப்பு வந்ததாகவும், செங்கல் வந்ததாகவும் பல செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் ஆன்லைனில் மொபைல் போன் ஆர்டர் செய்து காலி பெட்டிகள் மட்டுமே வந்ததாக பொய் கூறி சுமார் ரூ.54 லட்சம் மோசடி செய்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 
 
டெல்லியை சேர்ந்த ஷிவம் சோப்ரா என்பவர் அவ்வப்போது ஐபோன் உள்ளிட்ட விலையுயர்ந்த போன்களை ஆர்டர் செய்வார். பின்னர் அந்த போன்களை விற்றுவிட்டு, காலி பெட்டி வந்ததாக நிறுவனத்திடம் கூறி அதற்கான பணத்தையும் பெற்றுவிடுவார்
 
இதேபோல் 166 முறை பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆன்லைன் நிறுவனம் செய்த புகாரின் அடிப்படையில் ஷிவா சோப்ராவை கண்காணித்ததில் அவர் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :