Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதுதான் முடிவின் ஆரம்பம்: பாஜகவுக்கு மம்தாவின் எச்சரிக்கை டுவீட்

Last Modified புதன், 14 மார்ச் 2018 (16:18 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்வாங்கியதால் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, முதல்வர் யோகி ராஜினாமா செய்த மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது அரசியல் விமர்சகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் உபி மாநிலத்தில் அதிக எம்பிக்களை கைப்பற்றும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது அந்த கட்சிக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது

இந்த நிலையில் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''உ.பி இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான். '' என்று தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :