1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:29 IST)

ஒருநாள் பாஜகவும் உடையும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

mamtha banarjee
ஒருநாள் பாஜகவும் உடையும் என்றும் பாஜகவை உடைக்கவும் ஒருநாள் ஒருவர் வருவார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது அதனால் பணம், வலிமை, மாபியா பலத்தை அது பயன்படுத்துகிறது
 
ஆனால் ஒருநாள் பாஜகவும் உடைய வேண்டிய நிலை வரும் உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் 
 
மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து மற்ற மாநில அரசுகளையும் பாஜகவு கவிழ்க்கும் என்றும் மகாராஷ்டிரா அரசியல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்திலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாஜக தான் உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.