செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (16:19 IST)

இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் மம்தா பேட்டி!

பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா மக்களுக்கு நன்றி சொல்லியுள்ளார். 
 
இது குறித்து பேசிய மம்தா, பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றபெற வைத்த மக்களுக்கும், நான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி. நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி. பவானிப்பூர் மட்டுமின்றி சம்சர்கன்ஞ் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும் என தெரிவித்தார்.
 
மேலும் பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது வெற்றியை உறுதி செய்துள்ளதால் அவர் அம்மாநில முதல்வராக தொடர்கிறார்.