செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (10:25 IST)

சனாதனம் குறித்து உதயநிதியின் பேச்சு.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கருத்து..!

Mallikarjun Kharge
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இண்டியா கூட்டணியில் உள்ள ஒரு சிலரே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனார். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  மதமும் அரசியலும் வெவ்வேறானவை என்றும் இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். 
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து கூறியதை விவாதிக்க நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்ட்தார். மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவர் கண்டிக்கவும் இல்லை ஆதரவு தெரிவிக்கவும் இல்லை என்பது இதன் மூலம் புரிய வருகிறது 
 
 ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸில் உள்ள மற்ற தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran