திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (13:10 IST)

ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த முடியாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவார்களா? மஹுவா மொயிட்ரா

மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த முடியாதவர்கள் எப்படி ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவார்கள் என முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் குறித்து அறிவிப்பு எதுவும் நேற்று வெளியாகவில்லை.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த உடன் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொயிட்ரா தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் மக்களவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த முடியாதவர்கள் எப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிகிறார்கள்? பாதுகாப்புக்காக அங்கு அக்னி வீரர்களை பயன்படுத்திவீர்களா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்


Edited by Siva