புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (07:38 IST)

பெண்களுக்கு மாதம் ரூ.3000.. இலவச பேருந்து.. மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி..

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் போது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் ஆளும் மகாயுதே கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு வரும் நிலையில், மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய், அரசு போக்குவரத்துக் களில் பெண்களுக்கு இலவச பயணம், விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 4000 ரூபாய், 25 லட்சம் ரூபாய் வரை உடல் நலக் காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மகாயுதே கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 2100 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 3000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva