1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (17:15 IST)

காதல் திருமணம் செய்த ஜோடியை உயிரோடு எரித்த கும்பல்

மஹாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் வசித்துவந்தவர் முகேஷ்சிங்(23). இவர் ருக்மணி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஆனால் ருக்மணி வேறு சமூதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உறவினர்கள் காதல்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் முகேஷ் - ருக்மணி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தில் ருக்மணியில் அம்மா மட்டும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
 
இதற்கிடையில் பெண்ணின் உறவினர்கள், முகேஷின் குடும்பத்தை மிரட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும் முகேஷ் - ருக்மணி ஒன்றாகவே வாழ்ந்துவந்தனர்.
 
திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் ருக்மணி கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
 
அதன்பின்னர் கணவர் வீட்டிற்கே செல்ல ருக்மணி முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு ருக்மணியின் வீட்டார் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது. அப்போது தனது கணவர் முகேஷுக்கு இதுபற்றி கூறி தன்னை கூட்டிக்கொண்டு போகுமாறு கூறியுள்ளார். 
 
முகேஷும் அங்கு சென்றபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் கோபாவேசம் அடைந்த பெண்ணின் மைத்துனர்களான சுரேந்திரா , கான்சாம் ஆகியோர் வீட்டில் அறையில் ஜோடியை அடைத்துவைத்தனர்.
 
பின்னர் அறைக்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் எரிந்த ஜோடி சப்தம் போட்டு அலறினர். இந்த சப்தம் கேட்டி அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர்.
 
ஆனால் 70% தீக்காயம் அடைந்த ருக்மணி  மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்போது முகேஷ் மட்டும் 80 சதவீதம் காயங்களுடன் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
இதுசம்பந்தமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளிடம் விசாரணை செய்துவருவதாகச்  செய்திகள் வெளியாகின்றன.