செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (06:23 IST)

முக்கிய போட்டியில் சொதப்பிய கொல்கத்தா: பிளே ஆஃப் சுற்றில் ஐதராபாத்

நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை, சென்னை, டெல்லியை அடுத்து ஐதராபாத் தகுதி பெற்றுள்ளது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 16.1 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ரன்ரேட் அடிப்படையில் மும்பை முதலிடத்தை பிடித்தது. 

 

இதனையடுத்து முதல் பிளே ஆஃப் சுற்று மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே வரும் 7ஆம் தேதி அதாவது நாளை சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே சென்னை அணியை இந்த தொடரில் இருமுறை வென்றுள்ள மும்பை இந்த முறையும் வெல்லுமா? அல்லது சென்னை அணி மும்பையை பழிவாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
அதேபோல் இரண்டாவது பிளே ஆஃப் சுற்று் வரும் 8ஆம் தேதி டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது