1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:58 IST)

மக்களவைத் தேர்தல்.! மணக்கோலத்தில் வாக்களித்த இளைஞர்..!!

Wedding
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் மணக்கோலத்தில்  வாக்களித்தார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.
 
இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாடு முழுவதும்  13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 8 தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

 
மகாராஷ்டிராவின் வதர்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் திருமணம் நடைபெறவுள்ள இளைஞர் மணக்கோலத்தில் வருகை தந்து வாக்களித்தார்.