வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:33 IST)

இப்படியும் நிதி கிடைக்கும் : சரக்கு விலையை ஏற்றிய கேரள அரசு

கனமழை காரணமாக அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள கேரள அரசு, மதுபானங்களின் விலையை ஏற்றியுள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளிலில்லாத அளவுக்கு கனமழை பெயது வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவுகளின் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் தங்கள் உடமைகள் மற்றும் வீடுகளை இழந்துள்ளனர்.  
 
எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.  அதேபோல், தமிழகத்தில் இருந்து பலரும் ஆன்லைன் மூலமாக கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டும் வகையில் மதுபானங்களின் மீதான கலால் வரியை அடுத்த 100 நாட்களுக்கு மட்டும் உயர்த்தி கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் “வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, மதுபானங்களின் மீதான கலால் வரி 0.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.230 கோடி கூடுதலாக கிடைக்கும். இந்த வரிப்பணம் முழுவதும் நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.