வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (07:30 IST)

மதமாற்ற தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்:

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
 
கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என்று ஆசைகாட்டி ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு தடை விதிப்பதாக இந்த மதமாற்ற தடை சட்டம் கூறுகிறது
 
மேலும் மதமாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்றும் கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழி செய்வதாக கூறப்படுகிறது
 
கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவையில் இந்த மதமாற்ற தடைச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த மசோதாவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது